அதை நோக்கி?
அழகான கண்களில் விரியும் சிரிப்பு,
கண்ணீரை மறைக்கும் நடிப்பு,
வயிற்று தீயின் தாக்கம்,
தண்ணீரில்லா உறக்கம்,
செருப்பற்ற பாதம்,
கற்களுக்கு இல்லை இரக்கம்,
போர்வையற்ற படுக்கை,
குளிருக்கு ஒரு இருக்கை,
ஏதிர்ப்பார்ப்பு என்னும் ஏக்கம்,
ஏழை மனதில் அடக்கம்,
நாளை பொழுதின் பிறப்பு,
நமது மனதில் களிப்பு,
முயற்சி ஒன்றே ஆயுதம்,
வெற்றி பெரும் இந்த யுத்தம்.