எழுத்தாளன்...

"மரங்களை வெட்டாதே"
என்ற கதையை
எழுதிவிட்டு
அதை...
வெட்டப்பட்ட
மரத்தாலான
புத்தகத்தில்
வெளியிட்டேன்...
இன்று மரங்கள்
எனைப் பார்த்து
ஏளனமாய்ச்
சிரிக்கிறது...
சொல்வதைச்
செய்யாதோர்
பட்டியலில்
நானும் ஒருவன்...
ஒரு எழுத்தாளன்..!