ஒளிவிளக்கு ஆசிரியர்கள் 555

கல்வி.....

செல்வங்கள் பதினாறு
அதில் முதல் செல்வம்...

கல்வி...

அம்மா என உதிர்க்கும்
முதல் வார்த்தை...

கற்று கொடுப்பவள் தாய்...

அம்மா என்ற சொல்லை
எழுத கற்று கொடுபவர்கள்...

ஆசிரியர்கள் ஆசிரியைகள்...

உயிர் எழுத்தை
சொல்லிகொடுத்து...

அகர முதல எழுத்தெல்லாம் என
எழுத கற்று கொடுத்து...

கரை சேர்த்த தோணி
நீரில் ஆடுவதுபோல்...

கல்வி எனும் அழியா
செல்வத்தை கற்று கொடுத்து...

எனக்கு ஏற்றிவைத்த
ஒளிவிளக்கு...

நாம் மேலே
செல்லும் போது...

மாதா பிதாவைபோல்
சந்தோசப்படும் நம் குருவும்...

ஆசிரியர் ஆசிரியைகள்...

(எனக்கு கற்று கொடுத்த என் குருக்களுக்கு இது சமர்ப்பணம் வணங்குகிறேன் நான் அவர்களை.)

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (5-Sep-12, 9:17 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 490

மேலே