அன்னையின் கண்ணீரைத்துடைக்கும் மழலை.....!

அம்மா.....!

கையில்லாத உனக்காக
கைகளோடு நான் பிறந்தேன்..!

நிலா சோறு எனக்கூட்ட
நீ ஏங்கி வருந்தாதே....!
உனக்காக சோறு ஊட்டவே - நான்
வரம் வாங்கிப் பிறந்தேனே...!

நம் ஒருவேளை சோற்றுக்காக
நீ படும்பாட்டை
நான் ஒருவாய் சோறு
உனக்கூட்டும்போது மறந்தாயே.....!

தொட்டிலிலே என்னைத் தாலாட்ட
தூக்க முடியாமல் ஏங்காதே...!
உன் மடி தவிர சிறந்த தாலாட்டு
இவ்வுலகிலே இல்லையே....!

கட்டியணைத்து என்னைக் கொஞ்ச
கண் கலங்கி நிற்காதே....!
உன் கண்ணீரைக் துடைக்க
நான் இருக்கிறேன் மறக்காதே.....!

எழுதியவர் : பா.நேசவேணி (6-Sep-12, 7:33 pm)
சேர்த்தது : nesaveni (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 6187

மேலே