சாம்பாலாக போறேன் !

முப்பதெட்டு உசுரு
மூட்டைகட்டி கிடக்கு,
கேதம் கேக்க வந்தநீங்க - நின்னு
எம் பொலம்பளையும் கேட்டுப் போங்க !

வெடி சுத்த போனேன் - எங்கால
எமன் சுத்தி வந்தான்,
எதிர்த்து போராட சத்தியில்ல
சுடச்சுட செத்து
சுடுகாட்டுக்கு போறேன் !

சாமி போடாத சோற - கந்தக
பூமி போட்டுச்சு - சாமி
கொடுத்த உசுர - ஏன் இந்த
பூமி திங்குது ? - கந்தக
பூமி திங்குது ?

காசுக்கு வழியில்ல,
கஞ்சிக்கு துப்பில்ல,
வயித்த கழுவத்தானே
இந்த பாத வந்தோம் - இப்படி
கருகி சாகவா
வண்டியேறி வந்தோம் ?
நீங்க கரியாக்க தானே
நாங்க திரியாகுறோம் !

பணதிங்கும் முதலாளி
காசு வாங்குற அதிகாரிக,
மண்டாக நாங்க
இருந்ததால தானே - சேர்ந்து
கொன்டாக எங்கள !

வருசா வருசம்
தீபாவளிக்கு வரும்
தீராவலி இது - உயிர்
நாரா கிழியுது !

கந்தக பூமிக்கு
எங்க சனம் மேல
கரிசனம் கிடையாதா ?
சாவும் காவும்
சாகவே சகாதா ?

சாம்பாலாக போறேன் !
தீபாவளி வருகுது,
பாத்து வெடிங்க - ஓவ்வொரு
வெடியிளையும்
என் வேர்வ இருக்குது !

எழுதியவர் : வினோதன் (6-Sep-12, 7:24 pm)
பார்வை : 259

மேலே