வழிகள் தேடும் விழிகள்

நம் அன்றாட வாழ்வில் ,
எதிர் வரும் நிகழ்வுகள் ,
மிகச்சாதாரணமாகத் தான் தெரிகிறது ...

திறமைகள் மதிக்கப்படுகிறதா?
என்ற கேள்விகள் மட்டுமே என்றளவும் மறக்கபடுகிறது ..,

அந்த கால ..,
எத்தனை.. எத்தனை...
சிற்பங்கள் இன்றும் வெறும் குப்பைகளை
சுமக்கும் படியே திரிகிறது ....
அன்றைய சிற்பிகளின் உழைப்புக்கான
விடை தான் என்ன ....

ஓவியம் தேர்ந்த பலர் இன்றும்
வாய்புகள் இல்லாது ,..,
தங்கள் கற்பனைகளையெல்லாம்
வெறும் கழிவறையை சுட்டும்
படங்களிலும் ..,
விளம்பர படங்களுக்கும் தள்ள படுகிறார்கள் ...,
பாவம் ..,
என்ன செய்ய ,
வாழ வேண்டும் ...,

யார் தான் பார்க்கிறோம் .,
அவர்கள் திறமைகளை ..,

யாருக்கு தெரியும் , ஏமாற்றம் மட்டுமே
அவர்களின் எதிர் வரும் படிக்கட்டுகள் என்று ..,

ஏமாளி என்ற பெயர் ஒன்றே
அப்போராளிகளின் வெகுமதிகள் ..,

மேலே சொன்ன வரிகள் தவறெனில்
மன்னிக்கவும்.....


இது போன்ற பலருக்கு இடமில்லை
என்ற வருத்தமே மேலோங்கி ...,
இங்கே விடு பட்ட எல்லா துறைகளிலும் சரி ..,

அங்கீகாரம் என்ற ஒன்றில்லை
என்பதே முன்னிலை,

சில நேரம் ..,
அர்த்தம் தெரிந்தவர்கள்
ஆராதனை செய்கிறார்கள் ....உண்மைதான் ...

ஆனால் ,
வலிகள் தெரியாதவர்கள் ,
எப்போதும் சோதனையே செய்கிறார்கள் ...,

சாதனைகளை யாரும் சுட்டிக்காட்ட வேண்டாம் ...
சற்று வேதனைகளை மட்டுமாது விட்டு
தராமளிருப்போம் .....,

வாய்ப்புகள் தான் இல்லை ...
வேண்டாம் ,
அவர்களில் .,
வார்த்தைகளால் தொல்லை...,

எழுதியவர் : கைலாஷ் (6-Sep-12, 8:32 pm)
பார்வை : 549

மேலே