வன்னி முகாம்கள்..

வன்னி முகாம்கள்!
முகம்கள் தெரியாத முகாம்கள்.
முகரிஇல்லாத முகம்கள்.
தொலைந்துவிட்ட வாழ்வை
நினைக்கமுடியாத தொந்தரவு
எத்தரவும் எடுக்கமுடியாதஇடங்கள்.
மறைக்கப்பட்ட மடங்களுக்குள் வாழ்கின்றோம்.
இங்கு தமிழ்வீரியம் இழக்கப்படுகின்றுது.

சிங்களத்தின் தையிரியத்தால்
பெண்களுக்கு விந்தைகாட்டும் விந்துகள்.
தாலிகட்டப்படாமல் விதவையாக்கப்பட்டபெண்கள்.
பொன்னள்ளும் பூமியில் பொரிச்சகுஞ்சுகள்
தமிழை எள்ளவும் நினைக்கமுடியவில்லை
நனைக்கிறது சிங்களம் பெண்ணின் அங்கங்களை
முட்கம்பிக்குள் முணுமுணுக்க முடியவில்லை
கசகசக்கி ஆசை நிறைவேற அந்தரங்கம் காட்டுகின்றான்.
இங்கு தமிழ்வீரியம் இழக்கப்படுகின்றுது
தமிழ் கரு கலைந்ததால் நாங்கள்
கரைந்துபோன முட்டைகளால் கருவேற்றப்படுகின்றோம்.

பத்து மாதம் சுமந்தால் சிறைக்குள் சிங்கக்குட்டிகள் பிறக்கும்
பிரிக்கமுடியாத உறவுகளை பிரிந்துவாழ்கின்றோம்.
பிரிவில்லாமல் பிதுக்கிஎடுக்கிறான்.
பதுக்கிவைத்தபொருட்கள் பாதங்களில் கிடக்குமானல்
சுட்டுவிரல்கள் பதில்சொல்லும்.
(செ.அந்தணன்)

எழுதியவர் : ச.Anthanan (6-Sep-12, 8:43 pm)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 356

மேலே