அட்டகத்தி

நான் மாவீரன் தான்
புலியின் தலையை துண்டிப்பதும்
சிங்கத்தின் வாயை கிழிப்பதும்
யானையின் காலை உடைப்பதும் -எனக்கு
சர்வ சாதாரணம்
கோபத்தின் உச்சத்தில் அம்மா சொன்னார்கள்
இனிமேல் உனக்கு
பொம்மைகளே வாங்கி கொடுக்க மாட்டேன் என்று!!!!

எழுதியவர் : தமிழ் காதலன் -ச.லூ. ஜான் (6-Sep-12, 8:51 pm)
சேர்த்தது : stanly
பார்வை : 287

சிறந்த கவிதைகள்

மேலே