காதல் கல்லறை ...!

நேற்றைய சந்திப்பின் நிகழ்வு
தூங்க விடாமல்
துரத்தி துரத்தி முட்டுகிறது
ஜல்லிக்கட்டு காளையாய் கனவுகளில் ...!

நாம் தோண்டிப்புதைத்த
காதல் கல்லறையில்
தேரைய்யின்
உயிர் வாழ்வாய் உன் நினைவுகள்.....!

செத்த மரத்தை
தேடிச்சென்று கொத்தும்
மரங்கொத்தியாய்
அவ்வப்பொழுது
எங்கிருந்தோ உன் நினைவுகள்
விழியம்புகளால் குத்தி
காயப்படுத்துகின்றன என் இதயத்தை...!

நாம் சுற்றித்திரிந்த
நந்தவனத்தில்
இன்று நான்
என் மனைவியோடும்
நீ உன் கணவரோடும் ....!

இது
காலம் ஏற்ப்படுத்திய
விழிகளின் விபத்து ......!

இறுதியில்
கண்ணீரோடு
நம் காதலுக்கு கல்லறை கட்டிய
அதே
பூங்காவின் புங்கமர நிழலில்
இன்று
எதிரும் புதிருமாய்
பார்த்தும் பார்க்காதது போல்
ஜோடிப்புறாக்களாய் ....நாம்
நினைவுகளை அசை போட்டவாறு...!

என் பெயரின்
முதல் எழுத்தையும்
உன் பெயரின்
முதல் எழுத்தையும் சேர்த்து
உன் குழந்தையை ..நீ
அழைத்தபொழுது
நெகிழ்ந்து போனேன் ....

கல்லறையில் பூத்திருந்தது
ஈரமான ரோஜா ....!

எழுதியவர் : வெற்றிநாயகன் (9-Sep-12, 7:40 pm)
பார்வை : 227

மேலே