ஞாயிறு போதும்!ஞாயிறு போதும்!
ஞாயிறு போதும்!ஞாயிறு போதும்!
பல திங்கள் கடந்து நாசாக்காரன்
செவ்வாய் சேர்ந்தான்!!
ஞாயிறு போதும்! நமக்கு ஞாயிறு போதும்!
புதன் போவான்!
வியாழன் காண்பான்!
வெள்ளியை விலைக்கு வாங்கி
சனி சகலமும் சரி பார்ப்பான்!!
இருக்கவே இருக்கு ஞாயிறு!
இந்திய தோழமைகளே!
ஞாயிறு போதும்! நமக்கு ஞாயிறு போதும்!
வீணாய் போக!......
விடுமுறை நாளாம்!
ஞாயிறு போதும்! நமக்கு ஞாயிறு போதும்!
யுரேனஸ்,நெப்டியூன்,புளுடோவில்
எவன் நடந்தால் நமக்கென்ன?!...
அரட்டை அரங்கம் பார்த்து
குறட்டை விடும் நமக்கு!!
ஞாயிறு போதும்!ஞாயிறு போதும்!

