கிறுக்கனின் கிறுக்கல்கள் - 3
அறிவுரை சொல்லும் முன்
உன்னை நீயே
உளமார
ஆராய்ந்து கொள்வது
ஆகச் சிறப்பு .....
============================================
தன் கையை விட
தன்னம்பிக்கை வலியது !
தன் கையும் தடுமாறும்
தன்னம்பிக்கை தளர்ந்துவிடில் ........
============================================
ஆசை துறவினை போதித்த
ஆன்மிகம் இன்று சில
ஆசிரம ஆசாமிகளின்
ஆடை துறவு போதனை கண்டு
ஆறாத்துயரில் அழுகிறது...
==========================================
எவனொருவன் பெண்ணிடம்
காதல் தோல்வி என்று
கதையளக்கிறானோ
அவன் அப்பெண்ணை
கவரநினைத்து
காய் நகர்த்துகிறான் - பெண்மனம்
காதல் தோல்வி என்ற வாதத்தில்
கரைந்துவிடுவதனால்.......
===========================================
காதலும் போதைதான் - அது
உறங்கவும் வைக்கும்
உளறவும் வைக்கும்.....
============================================
காதல் !
காமத்தின் ஒத்திகையாய்
காமுகர் கைப்பாவையாய் மாறி
காலம் பல தாண்டிவிட்டது ...........
============================================
பணம் கோரும்
பத்து யாசகர்க்கு - நீ
பகிர்ந்தளிக்கும் சில்லரையை
பசியென்று கை ஏந்தும் ஒருவனுக்கு
பசியாற்றும் உணவாய் தந்தால்
பாரினில் அதுவே சிறந்த தானம் .................
===========================================
அசைவம் உண்டவனை
அபசாரம் என்று
பட்டுநூல் உடையணிந்த
பண்பாளன் சொல்கிறான்...
===========================================
கோழி அறுப்பவனை விட
கொடியோர் ?
பட்டாடை அணியும்
பயங்கரவாதிகளே !
=============================================
பெண்ணும் வாழையும் ஒன்று ,
தனக்கென வாழாது
பிறர்க்கென வாழ்வதால் ................
==============================================================================================