புலிக்கொரு பாடல்

புலிக்கொரு பாட்டுச் சொல்ல
புதுமுகக் கவியின் தேடல்
புவிக்கொரு பாட்டாய் ஆக
புனைந்திடும் புதிய பாடல்

காட்டிலே ராஜா என்று
கர்ஜிக்கும் சிங்கம் ஒன்று
கர்வத்தால் நின்றால் என்ன
கவர்வதோ புலியே வென்று

முகத்திலோ துடியின் வேகம்
அகத்திலோ வெறியின் தாகம்
முன்பல்லைத் திறந்து காட்ட
முப்படை பறந்து போகும்

காத்து தான் பார்க்க வேண்டும்
கம்பீரப் புலியின் தோற்றம்
கானகச் சூழலில் நாம்
காண்பதே களிப்பில் ஏற்றம்

வரியதோ உடலின் கோலம்
வளர்வதோ புலியின் காலம்
நடையதன் மிடுக்கைக் கண்டு
நடுங்குதே காட்டில் யாவும்

தோலிலே மருந்து உண்டு
துயரத்தைப் போக்கும் என்று
தப்பாகப் புலியைத் தாக்கும்
தீயோரைத் தடுப்போம் இன்று

ரசிக்கவே புலியைப் பார்த்து
ரசனைக்கு வலிமை சேர்த்து
நாட்டிற்க்கு பெருமை சேர்ப்போம்
நம்புலியின் உயிரைக் காத்து.

எழுதியவர் : நா.குமார் (16-Sep-12, 9:36 pm)
பார்வை : 112

மேலே