பறவையை ரசிப்போமா

பறவைக்கு உணவு போட
பகலிலே வாசல் வந்தால்
பரவசம் நிறைந்து நெஞ்சம்
பகலையே ரசிப்பதேனோ

காத்து நான் இருந்து பார்த்தால்
கண்கவர் வண்ணப் பறவை
கீச்சென்ற குரலில் கூவி
கிளர்ச்சியில் திளைப்பதேனோ

சிட்டாட்டம் சின்னப் பறவை
சிறகுகள் விரித்து வந்து
சின்ன என் பறவைக் கூட்டில்
சிங்காரம் செய்வதேனோ

புறாவுக் கிந்த வீடு
பெரிதாகிப் போனால் கூட
பதமாக கூரை அமர்ந்து
புசிப்பது அழகே தானோ

அண்டங் காக்காய் ஒன்று
சிறுகுருவி விரட்டினாலும்
அதுவும் தன பசியைத் தீர்த்தால்
அது கண்டு ரசிப்பேன் நானோ

பறவைகள் பலவிதம் கண்டால்
பற்றுதல் கொஞ்சம் கொள்வோம்
இயற்கையின் அழகு தானே
இணை இலா இன்பம் காண்போம்

எழுதியவர் : நா.குமார் (16-Sep-12, 9:34 pm)
பார்வை : 133

மேலே