காகம்!

அந்தக் காகத்திற்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
வரவிருக்கும்
உறவினர் ஒருவரின்
வருகைக்கான முன் அறிவிப்பு
தான்தானென்று!
வாசலில் பசியால் கரைகிறது
காகமொன்று!
வீட்டினுள்ளே பாசமின்மையால்
கல்லாகின்றன
மனங்களெல்லாம்!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (16-Sep-12, 10:46 pm)
பார்வை : 126

மேலே