வெள்ளை காகிதம் !

நாம் ஒவ்வெருவரும்
இவ்வுலகிற்கு வெள்ளை
காகிதமாய் வருகிறோம்!

சிலர் கிறுக்கப்படுகின்றனர்,
சிலர் கிழித்து எறியப்படுகின்றனர் ,
சிலர் கசக்கி குப்பையில் வீசப்படுகின்றனர்,

ஆனால் சிலர் கவிதையாய் எழுதி பின் வாசிக்கப்படுகின்றனர் !
உனக்கென ஒரு வாழ்வை தேர்ந்தெடுத்து வாழ்ந்துவிடு !

வரலாற்றில் எழுதப்படுவாய் கவிதையாக !
இல்லையென்றால் கசக்கி எறியப்படுவாய் காகிதமாக !

எழுதியவர் : கவியாழினிசரண்யா.. (18-Sep-12, 11:36 am)
பார்வை : 305

மேலே