தமிழா !
தமிழா !
உலகம் படித்தது ஒழுக்கம்
எம்மை பார்த்து !
இப்போ உலகம் சிரிக்கிறது
நம்மை நினைத்து !
ஆயிரம் ஆயிரம் அவனி
ஆண்டது எங்கள் பரம்பரை
பரணி பாடி தரணி ஆண்டது
எங்கள் சோழர் வம்சம் ..!
உலகம் கூடி உடைக்கிறது
எங்கள் கூட்டை ..!
பறந்து பறந்து பயந்து போவதா !
திசைமாறி பறந்து பார் சிறைகள் இருக்கும்
வரை - சிறை இல்லை உனக்கு !
ஆண்ட தலைமுறை நீ
அடங்கி போகாதே !
ஆண்ட பரம்பரை நாம் ஆழ நினைப்பது
நாம்மை தப்பில்லை !
மாண்ட எம் உறவு மண்ணுக்காய் என்பதை
மறந்தால் தான் தப்பு !
தேசம் ஓன்று உனக்கென்றால் ..
வாசம் வந்து தமிழ் வீசும் இங்கே !
பாச உறவு நாம் என்று பார் கூட
கண்மூடும் எம்மை பார்த்து !
தமிழா....!
நீ நீயாகா இருந்துபார்
வானவில்லும் வில்லாகும்
உன் விழியில் !
வழிதந்து வானமும்
வலி மறைக்கும் உனக்கு..!
நம்பிக்கையோடு நடக்கட்டும்
உன் சுவடுகள் விடியலை நோக்கி !
தாஸ்