இழப்புகள்
அடிமைச் சட்டை கிழித்தெறிந்து
உரிமைச் சண்டை நாம் புரிந்தோம்.
நீதியைக் கேட்டதற்காய்
நிம்மதியை இழந்தோம்,
சரியான தீர்வு கேட்டோம்
சகலதையும் நாம் இழந்தோம்.
இழப்புகள் ஈந்ததெல்லாம்
இறப்புகள் ஒன்று மட்டும்.
ஒன்றிழந்தால் ஒன்று பெறலாம்!
நாமோ இருப்பதெல்லாம்
இழந்து விட்டோம்.
ஏதிலி வாழ்வொன்றே
இனி எங்கள் மிச்சம்.

