Hate the Like

நாளை என்பது நாட்களில் போதும்.
துன்பம் என்றும் தனக்கே போதும்.

கருத்தே இல்லாக் கல்வி வேண்டாம்.
கருணை தொலைத்த நெஞ்சம் வேண்டாம்.

பெருமிதம் வேண்டாம் பெருமை போதும்.
போதையுள் பேதையாய் மூழ்கிட வேண்டாம்.

தலைக்கு மேலே வெள்ளம் வேண்டாம்,
வருவாய் மேலே செலவு வேண்டாம்.

அடுக்கி வரினும் அசையாத ஊக்கமும்,
சேர்ந்தே அமைதி அமைந்தால் போதும்.

உழைப்பே இல்லா உயர்வு வேண்டாம்,
உயரிய நோக்கம் அறிந்தால் போதும்.

எங்கும் எதிலும் அளவே போதும்,
இன்பம் கூட அளவில் வேண்டும்!

வேண்டி வேண்டிப் பெற்றதெல்லாம்,
வேடிக்கை மட்டும் பார்த்து மாயும்,
வேதனை வேண்டாம்,
வேண்டுதல் வேண்டாம்!

எழுதியவர் : ராஜ ராஜன் (20-Sep-12, 6:20 pm)
பார்வை : 198

மேலே