இரத்த தாகம்

விடிகின்ற பொழுதுகள்
விரசங்களை விதைக்கையிலே
விடியாத விடியல்களாய்
தமிழர் நம் வாழ்வுகள்.....

தமிழன் என்ற நாமத்துக்காய்
தலை துண்டிக்கப்ப்டோம்,
தார் பீப்பாக்குள்
தீக்குழிக்க வைக்கப்பட்டோம்,
ஊனங்களாக்கப்பட்டு
உதிரம் சிந்தினோம்....

உறங்காத விழிகளிலும்
உவர்த்துப்போன வாழ்க்கையிலும்
சோகம் ஒன்றே சொந்தமாக
தொலைதேசம் வீசப்பட்டோம்....

சோகையிழந்த என்னினமோ
துயர் சுமந்து கூனி நிற்க,
(தமிழர்) நம் சோகக் கனல்களில்
குள்ளநரிகள் குளிர்காய்ந்தன,
கும்மாளம் போட்டன.
அடங்கியதா அவர்கள்
இரத்த தாகம்?

எழுதியவர் : S.Raguvaran (20-Sep-12, 6:07 pm)
பார்வை : 173

மேலே