சொந்த வீடா ?வாடகை வீடா?

அன்பர் கேட்டார்
சொந்த வீடா ?வாடகை வீடா ?
எப்போது வீடு கட்டப் போகிறீர் என்றார் ?

உயிரே மூச்சு என்ற வாடகைக்குத்தான்
இந்த உடம்பு வீட்டில் இருக்கிறது
இந்த உடம்புக்கு ஏன் இப்புவியில் சொந்த வீடு என்றேன் .

சுத்தப்படாது என
சத்தமில்லாமல் சென்று விட்டார்
அந்த சொந்த வீட்டுக்காரர்

நம் எல்லோருக்கும்
சொர்கத்தில் தான் சொந்த வீடு வேண்டும்
என்று தெரியாமல் ..........அவர்

இப்புவியிலும்
சொந்த வீடு வேண்டும்
எனப்புரியாமல் ..........நான்

எழுதியவர் : ஏகலைவன் (20-Sep-12, 3:13 pm)
பார்வை : 176

மேலே