நாளைய தூண்கள்
விரல் விடுத்து
விடுதலை செய்யுங்கள் ..
நாங்கள் நாளைய தூண்கள் .
தேர்வெனும் மனன முயற்சியை -எங்கள்
திறமை என கணக்கிடாதீர் ..
ஆழி சூழ் உலகு - எமக்கு
புத்தக சூழ் உலகானது .
பள்ளி கொள்ளா பள்ளி நாட்கள்
பாதிக்கிறது எம்மை பல் வகையாய் ...
என்று புரிகிறதா உங்களுக்கு...?
மதிப்பெண் தொழிற்சாலையின்
மறைமுக தொழிலாளர்கள் நாங்கள் .
இதை எங்கள் விதிப்பயன் என்பதா - இல்லை
உங்கள் மதி வீழ்ச்சி என்பதா?

