இல்லை மட்டும் இருக்கிறது
வேதியியலின் ஆளுமையினால்
நடைமுறை வேளாண்மையில்
ஆண்மை இல்லை ...!!
பணப்போதையின் ஆளுமையினால்
உலக அரசியலில்
ஊழலே இல்லாமல் இல்லை ...!!
இனம் மொழி மத
ஆளுமையினால் மனிதனிடையே
நல்ல குணம் மொழியும்
செயல்கள் இல்லை ...!!
அவசர யுகத்தில்
தேவையின் ஆளுமையினால்
அன்பு பாசம்
பண்பு நேசம்
அறவே இல்லை ...!!
இருக்கிறது,
இல்லை மட்டும்
பெரும் தொல்லையாக ....!!!