முதல் கவிதை

இவ்விடம்
காதல் கவிதைகளை
சமர்ப்பிக்கவும் சொல்லியது
ஓர் வலைதளம்

எனக்கு கவிதைகள் ஏதும்
தோன்றாததால்
காதலுடன் சமர்ப்பித்தேன்
உன் புகைப்படத்தை

சிறந்த கவிதையாக
தேர்ந்தெடுக்கப்பட்டது
என் கவிதை

ஒருவேளை நீ தான்
என் முதல் காதல்
என் முதல் கவிதை
என் முதல் காதல் கவிதை
என் முதல் கவிதை காதல்
எல்லாமுமே !!!
என்பதால் தானோ
எனக்கு இந்த பரிசு ??

எழுதியவர் : tamilpiriyan (21-Sep-12, 12:03 pm)
சேர்த்தது : tamilpiriyan
Tanglish : muthal kavithai
பார்வை : 112

மேலே