ஆத்மாவின் காதல்

கண்ணிலே காதலடி
கண்டதும் வந்ததடி
கற்பனையில் மிதந்தேனடி
காலங்கள் கடந்ததடி
காதலைச் சொன்னேனடி
வெறுப்பாக சுளித்தாயடி
வேண்டாம் என்றபடி
விட்டுப் பிரிந்தாயடி
இதயம் வலித்ததடி
வாழ்க்கை வெறுத்ததடி
இளமை மறைந்ததடி
முதுமை முத்துக்குளித்ததடி
இரு பருவமும்
உன்னை எண்ணியபடி
இனிதே முடிந்ததடி
என் வாழ்க்கை.
இனியும் தொடருமடி
என் ஆத்மாவின் காதல் ....!!

எழுதியவர் : த.மலைமன்னன் (22-Sep-12, 1:57 pm)
பார்வை : 193

மேலே