கயிறு திரிப்போம் வாருங்கள்.(STRING THEORY)
கயிறு திரிப்போம் வாருங்கள்.(STRING THEORY)
=====ருத்ரா
ஆம்.இது கயிறு திரிக்கும் வேலை தான்.கண்ணுக்கு தெரியாத இயற்பியல் நுட்பங்களை விஞ்ஞானிகள் கணிதமாக்கி காட்டுகிறார்கள்.இது தான் பேய் என்று ஒரு பிசாசை காட்டுவது போல் தான் இதுவும்.இரண்டும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாது.பயப்படத்தான் அல்லது பிரமிப்பு அடையத்தான்.
முடியும்.ஒரு புதிரை அவிழ்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அதை விட மகா அல்லது மெகா சிக்கலை உள்ளடக்கிய புதிரை நமக்கு காட்டி
விளயாடத்தெரிந்தவர்களே விஞ்ஞானிகள்.வாருங்கள் அந்த விளயாட்டில்
கொஞ்சம் சேர்ந்து கொள்ளுவோம்.
இயற்பியல் உலகில் இன்றைக்கு புரட்சிகரமான கோட்பாடுகளாக கருதப்படுபவை இரண்டு தான்.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்ட "பொது சார்பும்"(GENARAL RELATIVITY) நீல்ஸ் போர் முன் வைத்த குவாண்டம் கோட்பாடும் (QUANTUM THEORY) அதாவது "அளவுபாட்டுக் கோட்பாடுமே" அவை.இவ்விரண்டையும் இணைக்கும் புதுக்கோட்பாடு தான் "அதிர்விழையக்கோட்பாடு" (STRING THEORY)என்பது.
இப்போது ஒரு பேய்க்கும் பிசாசுக்கும் நடுவே மாட்டிக்கொண்டு திகில் அடைவது போல் இருக்கிற்தா உங்களுக்கு? பயப்படதேவையில்லை.மழைக்கு பள்ளிக்குள் அதும் ஒரு நடு இரவில் ஒதுங்கியவர்களாக நீங்கள் இருந்தால் தான் அத்தகைய பயங்கள் வரும்.அம்பதுகளில் பள்ளிக்குள் புகுந்தவர்களுக்கு
விஞ்ஞான கணித ஆசிரியர்களின் கையில் உருண்டு கொண்டிருக்கும் பிரம்புகள் தான் நினவுக்கு வரும்.மற்ற ஆசிரியர்களைப்பற்றி குறிப்பிடவில்லை என்கிறீர்களா? அவர்கள் நம்மைத் தாலாட்டித் தூங்கப்பண்ண வந்த திலகங்கள் அல்லவா!போதும் இந்த விளையாட்டு
அந்த கயிறு திரிக்கும் விளையாட்டுக்கு வாருங்கள் என்கிறீர்களா? சரி.பார்ப்போம்.
இது வரை துகள் இயற்பியல் (particle physics) ஆற்றல் நகர்ச்சிகளை புள்ளிகளின் நகர்ச்சியாய் காட்டின.அதில் மாற்றம் செய்ய வந்ததே இந்த "அதிர்விழைக்கோட்பாடு".பிரபஞ்சத்தின் மிகச்சிறிய துகள் என்பது மேக்ஸ் ப்ளாங்க் என்பவர் 1900 த்து வாக்கில் கண்டுபிடித்த "ப்ளாங்க மாறிலி" தான்.அதை சிறிய புள்ளியாக கணக்கீடு செய்வது பிரபஞ்ச இயலுக்கு முற்றிலும் பொறுந்தாது.அதன் மதிப்பு ஒரு செண்டி மீட்டரை 10^33 ஆல் வகுத்துக்கிடைக்கும் மதிப்பு ஆகும்.ஆகவே அதை புள்ளியாகவே
கணக்கிட்டு வந்தார்கள்.ஆனால் பிரபஞ்ச இயல் கோட்பாட்டின் படி நகர்ச்சியடையாத தன்மை இந்த பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை.எனவே அந்த புள்ளியைக்கூட ஒரு சிறிய அதிர்விழைக்கோடாகத்தான் பார்க்க வேண்டும் என்கிறது."ஸ்ட்ரிங் தியரி".
இயற்பியலில் மரபுகாலம் தொட்டு இன்றைய காலம் வரை (from classical to modern )உள்ள கோட்பாடுகள் கணித சமன்பாடுகள் எல்லாவற்றிலும் ஒரு ஆற்றல் அல்லது துகளின் மிக மிக நுட்பமான அளவை "புள்ளி" (point)அளவில் தான் குறிப்பிடுவார்கள்.உதாரணமாக பாயின்ட் சார்ஜ், பாயின்ட் மாஸ்,பாயின்ட் எனர்ஜி,முதலியவை.இதற்கு நாம் ஈக்குளிட்டின் (EUCLID) வடிவகணித அடிப்படைகளை (geometrical axiomச்)பயன்படுத்தியதே காரணம்.இதில் புள்ளிகளும் நேர்கோடுகளும் மற்றும் கோணங்களுமே முக்கிய கூறுகளாய் வலம் வருகின்றன.இவற்றைக்கொண்டு வடிவமைக்கப்படும் உருவங்கள் மேற்சொன்ன ஆக்சியம்கள் எனப்படும் அடிப்படை விதிகளை வைத்தே உருவாக்கப்பட்டன.ஆனால் இன்றைய வடிவகணிதம் இத்தகைய விதிகளை மீறியவையாக உள்ளன.இது ஈக்குளிடியன் அல்லாத வடிவகணிதமாக (non-euclidian geometry)கருதப்படுகின்றன.இதற்கு முன்னோடிகளாக இருந்தவர்களின் பட்டியல் இதோ:
பாயின்கேர்,லெபோச்செவ்ஸ்கி,ரெய்மான்,
பொல்யா,டெஸ்கார்டெஸ்,
டெகார்டெ,போன்றவர்களே.(இன்னும் நிறைய..அது ஒரு நீண்ட பட்டியல் தான்.இது பற்றிய விவரத்துக்குள் போனால் கட்டுரை தடம் புரண்டு விடும்.எனவே அதை அப்புறம் பார்ப்போம்.
மறுபடியும் அந்த புள்ளிக்கு வருவோம்.அதிர்விழையக்கோட்பாட்டுக்காரர்கள் கூறுவதன் முக்கிய அம்சம் இது தான்.இதன் படி எலக்ட்ரான் போன்ற துகள்களை புள்ளியாக பார்ப்பதற்கு பதில் அதிர்வுகளைக்கொண்ட
..துடிப்புகளின் இழையாக அவற்றை பார்க்கவேண்டும்.ஒரு புழுத்துடிப்பே ஒரு முழுப்பிரபஞ்சமாக மாறிப்போனது என்றால் அது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா?
==============