முட்ப் படுக்கை
முள்ளின் மீது தவழ்ந்திருந்தேன்
உன் முத்து முகம் மறந்திருந்தேன்
வாழாமல் வாழ்க்கை வாழுகிறேன்
காற்றாக அலைந்து திரிகிறேன்
கண்ணில் நீரின் திரையுடனும்
நெஞ்சில் வாழ்வின் சுமையுடனும்
எண்ணங்கள் காற்றின் கீதங்கள்
வீணை இல்லாமல் பிறந்த ராகங்கள்
காற்றில் கலந்த உன்னை க் கண்டுபிடித்து
நானும் உன்னோடு கலந்திடவே
முடியாமல் துடியாய் துடிக்கிறேன்
உனக்கு உணர உணர் வில்லை