பெண்ணடிமை – பெண்ணுரிமை

பெண்ணடிமை – பெண்ணுரிமை
(இன்னிசை வெண்பா)
பொம்மையாய்ப் பெண்டிர் பொறுமை இழந்தனர்
தம்மையே தாழ்த்திடும் தன்னலத் தைஎதிர்த்தே
உண்மைதான், ஆண்களிடம் உண்டான வோர்ஏதம்
பெண்ணடிமை என்றபெரும் கேடு

கேடுகள், வன்கொடுமை, கொல்லுதல், என்றுபல
பாடுகள் பட்டனர்நம் பெண்டிரும் பல்லாண்டாய்
நாடுகள் எங்கிலுமே நாம்காண்ப தேயிதுவாம்
ஏடுகள் சொல்கிறதே யின்று

இன்றுயிவ் இல்லலோ இப்படியே இல்லையிங்கு
என்றும் தொடருமோ ஏதமாம் இக்கொடுமை?
வென்று வருகிறார்நம் வேல்விழியர், பெண்ணுரிமை
நன்றெனச் செப்புவோம் நாம்

நாமென்றால் ஆண்களும் பெண்களும் தானிங்கே
யாமொன்றும் தாயின்றி வந்ததில்லை, ஓமென்ற
ஒர்சொல்லில் உள்ளதுகாண் ஓம்சக்தி, ஆகநம்
ஈர்சொல்லும் ஒன்றேயா மிங்கு!
----- Dr. சுந்தரராஜ் தயாளன், பெங்களூர்.

எழுதியவர் : Dr. சுந்தரராஜ் தயாளன், பெங்க (30-Sep-12, 9:10 pm)
பார்வை : 195

மேலே