இனியெனும்…….
இனியெனும்…….
அறிவு ஒரு கூர்மையான
இருமுனை கத்தி
ஒரு அறிவாளி
நல்முனையை பயன்படுத்தினால்
நலம் பெறலாம்.
இயலாமைக்கும்
கையாலாக தனத்திற்கும்
இலக்கணம்
தேடக்கூடாது…
கடன் பட்டவன்
தன் வேட்டியை விற்று
இடுப்பை விடுத்து
கடனை கட்டுதல்
தன்மானத்திற்கு
தரம்..
பகட்டான வாழ்க்கை
சொகுசு வாகனம்…
இதை இழக்க
மனம் இடம் தராத
வாழ்க்கை..
அரிசிக்கே அன்னையை
நம்பினிற்கும்
மனிதன்…
நெற்கன்றுக்கு
விளக்கம் தரலாமா..
இன்னும்
காலம் இருக்கிறது
வாழ்க்கை இருக்கிறது
வாய்ப்பும் இருக்கிறது
கையாலாகதனத்திற்கு
கணக்கு காட்டுவதை
விடுத்து..
கடவுள் கொடுத்த நல்லறிவினை
நலனுக்கு பயன்படுத்து..
உளவு திட்டங்களுக்கு
செலவிடும் அறிவினை
எண்ணி
உலாவுவதை விடுத்து
நல்ல வழியில்
உன் நல்லறிவாற்றலை
பயன்படுத்து
அறிவு ஒரு கூர்மையான
இருமுனை கத்தி
ஒரு அறிவாளி
நல்முனையை பயன்படுத்தினால்
நலம் பெறலாம்.
இது
உனக்கு
இறுதி சொல்……
இனியேனும்
வாழ்க்கை வரலாம்…
இவன்
அனுபவத்தில் வாழ்க்கையை வென்ற
ஒரு சாராசரி மானிடன்…
உன்னளவு அறிவில்லா சராசரி மாணவன்..

