சிறுவனின் ஏக்கம்

நானும் பள்ளி செல்லணும்
சேட்டு, சப்பாத்து போடணும்
துள்ளி ஓடி விளையாடணும்
அள்ளி அன்பை பருகணும்
சிறகு கட்டி பறக்கணும்
துரவு தேடி குளிக்கணும்
மகிழ்ந்து நானும் தூங்கணும்
தினமும் இப்படி விடியணும்
ஏக்கத்தில் உதிர்ந்த துளிகள்
என் உள்ளத்தை உரசியது,
கடை திறக்க போகணும்
சீக்கிரம் எழுந்திரு என்று.....

எழுதியவர் : S.Raguvaran (30-Sep-12, 11:01 pm)
Tanglish : siruvanin aekkam
பார்வை : 191

மேலே