அநாதைகள் நாங்கள்!!!

யாரோ இருவர் புணர்ச்சியில்
உருப்பெற்ற நாங்கள்
தெருவோரம் வாழ்கிறோமே!
தப்பேதும் செய்யாமல்
அநாதைப்பேர் தாங்கி
சோறின்றி தவிக்கிறோமே!
நாங்கள் அம்மாவை தொலைத்தோமா?
அம்மா எங்களை தொலைத்தாரா?
நிதர்சனங்கள் ஏனோ
எட்டாத தொலைவினிலே?
அன்பு தேடுகிறோம்
அம்மாவின் வடிவிலே,
அடிமாடாய் உழைக்கிறோம்
அண்ணாவின் கடையிலே,
சபிக்கப்பட்ட எங்களுக்காய்
ஜெபிப்பீரோ இந்நாளிலே?

எழுதியவர் : S.Raguvaran (30-Sep-12, 11:21 pm)
பார்வை : 260

மேலே