விண்மீன்கள்

வான் நீந்தும் தாரகைகளே...!
யார் கொட்டியது இவைகளை
பார் முழுவதும் காணட்டுமென
சின்ன விழிகளை சிமிட்டி சிமிட்டி
நின்றாடும் தாரகைகள் படு சுட்டி
யார் வரவை எண்ணி இத்தேவதைகள்
வான் திடலில் வலம் வருகிறார்கள்
ஓ....!
நிலவுமகன் முகில்ரதத்தில்
உலா வருவதை எதிர்பார்த்தா...?

எழுதியவர் : பா.நேசவேணி (1-Oct-12, 12:15 am)
சேர்த்தது : nesaveni (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : vinmeengal
பார்வை : 500

மேலே