இயற்கை இரவு
கிழக்கு கடற்கரை சாலையின் ஓரம்,
மொட்டைமாடியில் இரவும் நானும்,
முழுதாய் நீந்தும் நிலவும், வானும்,
வெள்ளை நிழலாய் விண்ணின் மீனும்,
தீண்டும் தென்றல் போர்வை ஆக,
கட்டாந்தரை இங்கே தொட்டிலாக,
வண்டிகள் எங்கோ தாளம் போட,
தவளை சத்தம் தாலாட்டு பாட,
இருபது ஆண்டுகள் தொலைத்த ஒன்று,
கிடைக்காமல் தவியாய் தவிப்பவர் உண்டு,
மின்தடை சுகமாய் தந்தது இன்று!

