புதிய தேசம் புறப்படு

பழையன கழிந்து போயின
அன்பெனும் இனிய ராகம்
உள்ளத்தில் வழிந்து ஓடும்
புத்தம் புதிய தேசம் -புறப்படு

தீராத தீவிர வாதம்
தீவிரமாய் அழிந்து போகும்
உலகெல்லாம் மகிழ்ச்சி பொங்கும்
புதியதோர் புத்தன்தேசம் -புறப்படு

இடர்கள் பல வரக் கண்டும்
கலவரம் சிறிதும். இன்றி
கொடுமைகள் எதற்கும் அஞ்சா
நடுங்காத காந்தி தேசம். - புறப்படு

வங்கத்தின் மிகைநீர் இங்கே
கே ட்டவன். நமது பாரதி
தணிந்தது சுதந்திர தாகம்
உதிக்கும் தாகமிலா தேசம். - புறப்படு

சாதிகள் இல்லைஅடிப் பாப்பா
என்றான் புரட்சி பாரதி
அடிக்கடி நடக்கும் அடிதடி
அடியோடு மறையும் தேசம் புறப்படு

எழுதியவர் : டாக்டர் குமார் (6-Oct-12, 6:46 pm)
சேர்த்தது : Drkumar234
பார்வை : 194

மேலே