நான் இருப்பேன்
நீ மழை என்றால்
அது போய் சேரும் கடல் ஆவேன் .
நீ இதயம் என்றால்
அதில் ஓடும் இரத்தம் ஆவேன்
நீ பூ என்றால்
அதில் இருக்கும் வாசம் ஆவேன்
நீ மரம் என்றால்
அதில் வாழும் பறவை ஆவேன்
நீ சிப்பி என்றால்
அதில் இருக்கும் முத்தாவேன்
நீ நீஎன்றால்
அதில் நான் இருப்பேன் ...