அடடே ...! பகுதி-2
கூடங்குளம் !
விடை தெரியாத
வினா ?
அணு உலையா ?
அன்னாடம் காய்ச்சிகளின்
பரிதாப நிலையா ?
ஏழைகளின் பாதுகாப்பா ?
இருண்ட தமிழகத்தின்
இருளுக்கு சிறிது நேர
ஓய்வா ?
மதம் பிடித்த
மத்திய அரசா ?
மதி கொண்டு
தன வசதிக்கு
பயன்படுத்திக்கொண்ட
மாநில அரசா ?
எது சிறந்தது ?
பட்டிமன்றம் தொடர்கிறது ?
பாவம் பாப்பையா ?
குழப்பத்தில் பொதுமக்கள் ..
கொண்டாடத்தில் அரசியல்வாதிகள் ..
பிரச்னை இருக்கும் வரைதானே
அரசியல் ?
புரட்சிகள் நடந்தால் தானே
புதுமை பிறக்கும் !
பொது உடைமை
நிலைக்கும் !
அல்லது அழிக்கும்
பெரியவர்கள்
வரும்வரைக்கும்
பொறுத்திருப்போம் !
நல்லது நடக்கும்,
வசிகரன்.க

