பயமில்லை
விழுந்த ஒரு துளியையும் திரும்ப
விரும்பி எடுத்துக்கொண்ட கார்முகிலே,
அரும்பிய மனதினில் நானென்ன காதல்
நிரம்பிய உன் நாணத்தையா கேட்டேன்?
திரும்பிக் கொண்டு நிற்கிறாய்.
குறும்பு செய்ய இதுஒன்றும் கூதக்காத்தல்ல.
பூத்தப்பூ நறுமணம் புரியவில்லை உனக்கு,
புரியுமா புல்லாங்குழலின் உருண்டோடுமிசை?
உள்ளத்தின் கொட்டமடிக்கும் புன்சிரிப்பு,
எனக்குமட்டும் புரியவில்லை பூத்தபோழுது.
இறைவன் கொடுத்த அந்த இனிய
இசையை இஷ்டமின்றி இசைப்பதேன்?
சிரிப்பில் கள்ளமில்லையென கரைந்தேன்,
சிங்காரி, சிரித்தே கொன்றுவிட்டாயடி சிரிப்பை.
இன்னும் ஜாலவித்தை எத்தனை வரும்சொல்,
மரணம் ஒன்றும் பயமில்லை எனக்கு.

