*மழை*

*மழை*
முதல் காதலை மறக்க முடியாதென்பர்- பலர்
என்னால் முதல் மழையை மறக்க முடியதென்பேன்
பச்சிளவயதில் மழை தொட்டது ஜாபகம் இல்லை எனக்கு
ஆனால் என் முதல் மழை ................
ஐந்து வயதில் ,,,,, முதலாம் வகுப்பு
ஆங்காங்ஏய் இடி உடன் கூடிய மழை பெய்யும்
என்ற ஒரு ஒலி தொகுப்பு .....
கேட்ட தலைமை ஆசிரியர்
போட்டார் இடைவெளியுடன்
பாடசாலை முளுப்பு என்று....
அணிவகுப்பில் வெளிஏறி அண்ணார்ந்து பார்த்தேன்
முதல் துளி என் முகத்தில் ........
என்ன ஒரு ஆனந்தம் - நான்
தாயிடம் குளிர்பதற்க்கு அழுவேன்
அன்றோ மழை தாயிடம் அழாமல்....
முழ்கி நனைத்தேன் - அன்றில் இருந்து
மாரிமழை ...................
எனக்கும் மழைக்கும் முழுக்கு போட,
அம்மாவோ அழைத்து வர ,,,...
போனது வருடமோடு மழையும்
அம்மாவோடு குடையும் நானும்
பின் நான் பெரியவள் - எனக்கோ
மழைகோட் .......
அன்று பொழிந்தது மழை
மழை கண்ட எனக்கோ - நண்பி சொன்ன,
கதை கேட்டும் போடவில்லை நான் கோட்டும்...
உயர்தரம் முடிந்தும் உயரத்தில் இருந்து
என்மேல் விழும் மழையை - நான்
இரசிக்காமல் விட்டதில்லை ......மழை
வெளிவரும் நாளில் மழைதாயுடன்
நான் நனைய, என் தாயும் ......
என்தலை துவட்ட வீட்டில்
எப்போதும் காத்திருப்பாள் ....
என்ற நம்பிக்கையோடு ,,,,,
இந்த மகள்
க.டீனு மதி

எழுதியவர் : க.டீனு மதி (8-Oct-12, 4:14 am)
பார்வை : 218

சிறந்த கவிதைகள்

மேலே