வீழ்ச்சி

பூவாகப் பிறந்து கடவுளின் பாதங்களை அடைய நினைத்தேன் , ஆனால் மிதிபட்டேன் - மனிதர்களாலே ...

மழைத் துளியாகப் பிறந்து கடலின் சிப்பியை அடைய நினைத்தேன் , ஆனால் முடங்கினேன் - சேற்றினாலே ...

காகிதமாகப் பிறந்து காதலர்களின் அன்பை நிறைவு செய்ய நினைத்தேன் ,
ஆனால் கசங்கினேன் - ஒரு தலைக் காதலாலே

பெண்ணாகப் பிறந்து உயிரே உன்னை
அடைய நினைத்தேன் ,
ஆனால் இறந்தேன் - மௌனத்தாலே ././././

எழுதியவர் : (8-Oct-12, 8:58 pm)
சேர்த்தது : v subha
பார்வை : 138

மேலே