பெயர் சூட்டு (லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி)
புயலடித்ததும்
புரிந்துபோனது...
அதன் காரணம்
நீயென்று..
என் கோடை மனவானில்
மேகங்கள் சூழ்கின்றதே?
யாரோ அறிவிக்கின்றார்கள்
வானிலை அறிக்கை - இனி
எப்பொழுதும் என்
மனசுக்கு மழைக்காலமென்று...
பூக்களின் ரகசியங்கள் - உன்
புன்னகையில் அவிழ்ந்தன
பூமியின் விரசங்கள் - உன்
கால்களுக்குள் அமிழ்ந்தன
நீ எட்டியிருந்தாய்
என்னைவிட்டு -
இதயத்தில் வலி...
ஒட்டியிருந்தாய்
சுகம் என்ற சொல்லுக்கு
அர்த்தமே அப்பொழுதுதான்
புரிந்தது....
ஒருநாளும் ஆனதில்லை
இப்படி...
இன்றுமட்டும் என் இப்படி???
என் உள்ளம் இதுபோல்
உழன்றதில்லை...
கவிதை தன்னால்
கழன்றதில்லை...
என்ன பெயர் வைப்பதேன்றே
தெரியவில்லை - என்
உள்ளத்தில் ஜனித்த
இந்த "உறவென்ற"
குழந்தைக்கு...
பெயர் வைப்பதில்
பெரியவளாமே நீ...
நம் இந்தப்
புத்தம் புது உறவுக்கும்
நீயே வைத்துவிடு
மூன்றெழுத்தில் ஒரு பெயர்...