உயிரே!

உயிரே !
உன்னை சந்தித்த - அந்த
மணித்துளியேனும்
என் வாழ்க்கை
உனதாயிற்று.

உயிரே !
அனுதினமும் - உன்
தரிசனம் காண
அலைந்து திரியும்
வாழ்க்கை
எனதாயிற்று.

உயிரே !
என் செவிகளுக்கு
தேனமுதம் பாய்ச்சும் - உன்
வார்த்தைகளை
செவிமடுத்திட
செவிடாயிற்று - என்
செவியானது.

MG.சில்வர்ஸ்டார்...

எழுதியவர் : MG.சில்வர்ஸ்டார்... (10-Oct-12, 10:54 pm)
பார்வை : 203

மேலே