தோழிக்கு ஒரு மடல்

தோழியே
தொலைவைத் தேடிய
தென்றலே

தொலைவில் உன் தோழமை
தொலையாமல் என் தோழமை
தொலைந்த நினைவுகளில்
நானும் தொலைந்திருக்கலாம்
தொலையாத நினைவுகளில் நீ
தொடர்கிறாய்

காலை கதிரவன்
வேளை தவறாமல் அழைக்கையில்
உன் அதட்டல் கண்டேன்

மாலை நிலவொழியில்
மௌனமாய் எனை ரசிக்கும்
நட்சதிரங்களில்
உன்னை கண்டேன்

நிசப்த்தமாய் போன
இரவுகளில்
பொய்க்கோபம் கொள்ளும் உன்
பாசம் கண்டேன்

தென்றல் தீண்டுகையில்
உரிமை பேசும் உன்
உறவை கண்டேன்

நடைபாதையில் உன்
நினைவு
நடக்காமல் என்
நினைவு

இசைகளில் உன்
தாளம்
இசைக்காமல் என்
ராகம்

கவிதைகளில் உன்
எழுத்து
கல்லாய் போன என்
எழுத்து

பூக்களில் உன்
சிரிப்பு
பூக்காமல் என்
துடிப்பு

தனிமையில் உன்
நினைவு
தனித்துப்போன
என் நினைவு

வாழ்வில் வலி வேண்டும்
வாழ்க்கை வலிக்க வேண்டாம்
வலிகளை பரீட்ச்சித்திருக்கலாம்
வலிக்க ஏன் பரீட்ச்சித்தாய்

தூக்கத்தில் என்னை நீ
தொலைவில் விட்டாய்
நான் தூங்கவில்லை என்பது
புரியாமல்

நீ தேட நான் தொலைந்தேன்
என்னை தேடாமல்
நீ தொலைவாய் என்பது
புரியாமல்

நீ தேடுகிறாயோ இல்லையோ
நான் தொலைக்கவில்லை

எழுதியவர் : jananaraam (11-Oct-12, 12:35 pm)
Tanglish : thozhiku oru madal
பார்வை : 230

மேலே