என் கவிதை

இதயமெனும் காகிதத்தில்,
கனவு எனும் மையூற்றி,
காதல் கவியொன்றை வடித்திருந்தேன்..

என்னவள் படித்தாள்..
மையின் நிறம் பிடிக்கவில்லையோ,
கவியின் சுவை ரசிக்கவில்லையோ..

ஏனோ,
காகிதத்தை மட்டும் கிழித்தெறிந்து விட்டாள்..!!

எழுதியவர் : பிரதீப் (11-Oct-12, 3:21 pm)
பார்வை : 263

மேலே