மீண்டும் மீண்டும் அடித்து விரட்டப்படும் ராமேஸ்வரம் மீனவன்..? விக்கிரமாதித்யன் - வேதாளம் கதை நிஜத்தில்..?! ஈழதேசம் செய்தி..!

விக்கிரமாதித்யன் வேதாளம் கதை என்ன என்றால், ஒவ்வொரு முறையும் வேதாளம் கதை சொல்லும், கேள்வி கேட்கும், யோசித்து சிந்தனை செய்து பதில் சொல்லியவுடன் வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறிவிடும். விக்கிரமாதித்யனும் சளைக்காமல் வேதாளத்தை முதுகில் சுமக்க கிளம்பி விடுவான்.

கடந்த பத்து நாட்களாக எந்த சம்பவமும் நடக்கவில்லையே எனதூர் கருதி நம்ம மீனவர்களும் வலைகளை தூக்கிக் கொண்டு சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் கச்சத் தீவிற்கு கிளம்பி போயுள்ளார்கள். நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வந்துள்ளது இலங்கை கடற்படை. அங்கிருந்த மீனவர்களை அடித்து தாக்கி இருக்கிறார்கள்.

இந்த முறை எந்த விதமான ஆயுதங்களால் தாக்கினார்கள் என்று இதுவரை தகவல் இல்லை. கற்கள். கம்பு என்று தொடங்கி, இரும்பு ராடு, கம்பி என்று வளர்ந்து, கொக்கி கோடரி என்றும் இறுதியில் அல்ல துவக்கத்திலேயே துப்பாக்கியால் சுட்டும் துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்கியும் சுமார் 500 மேற்பட்ட மீனவர்களை கொன்று அழித்து உள்ளார்கள் இலங்கை ராணுவத்தினர்.

ஒருமுறை இந்திய கடற்படை தென் பிராந்திய கமாண்டர் அவர்கள் கூறினார்கள் இவ்வாறு. இலங்கை - இந்திய கடற் பகுதி அபாயகரமான பகுதியாகவே கருதப்படுகிறது என்று. இலங்கை கடற்படை தற்பொழுது அல்ல எப்பொழுதுமே கூறுகிறது இலங்கை - இந்திய கடற்படை மிக மிக ஆபத்தான பகுதி என்று.

ஆனால் யாருக்கு யாரால் அபயாகரமானது..? யாரால் யாருக்கு ஆபத்து..? என்று சொல்லாமல் மிக மிக ரகசியமாக வைத்திருக்கிறார்களோ என்ற ஐயம் கொள்கிறார்கள் தமிழக மீனவர்கள்.

ஆக, இரண்டு நாட்டு கடற்படைகளும் கூறுகிறதா..? இந்த கடற் பகுதியில் யாரும் மீன் பிடிக்க வரக்கூடாது என்று..? வந்தால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்று.

மணல், நீர், மலை, மலை முகடுகள், நிலப்பரப்பு, நிலத்துக்கு அடியில், காற்று என்று இறுதியில் கடலையும் யாருக்கும் விற்று விட்டார்களா..? ஏனென்றால் ஆபத்தான பகுதி..!அபயாகரமான பகுதி என்று கூறிக்கொண்டு ராணுவம் சுற்றி திரிவதால் இந்த சந்தேகம் வருகிறது என்கிறார்கள், அரசியல் நோக்கர்கள்.

எழுதியவர் : மாயாண்டிக்கருப்பு (11-Oct-12, 5:15 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 230

சிறந்த கட்டுரைகள்

மேலே