காவிரி

கற்பில் சிறந்த கண்ணகிபோல்
வாழ நினைத்தேன் முடியவில்லை!
சொற்போர் நிகழுது என்பால்
சோகம் எனக்கேன் புரியவில்லை!

பெண்ணாய் பிறந்தேன் பூவுலகில்
தன்னால் வளர்ந்தேன் மேதினியில்!
செல்லும் இடமெல்லாம் மானிடர்கள்- என்னை
அள்ளி எடுத்து அனுபவித்தர்!

போக்கிரி மாந்தர் கண்பட்டால்
சீக்கிரம் ஓடிட எண்ணிடுவேன்!
நாணல் தடுத்ததென் வேகத்தை
நானும் இழந்தேன் மானத்தை!

மனிதர் இயற்றிய சட்டங்கள்
மகள் மேஜராய் ஆகிவிட்டால்
அன்பு தந்தை ஆனாலும்
அதட்டிட உரிமை ஏதுமில்லை

என்னை படைத்தது மானிடனா?
என்ன உரிமை என்மீது?
எங்கும் பாய்வேன் மானிடா
என்னை தடுக்க நீ யாரடா?

எழுதியவர் : subapriyan (13-Oct-12, 12:13 am)
பார்வை : 141

சிறந்த கவிதைகள்

மேலே