வாருங்கள் மாற்றலாம்....
கோழையல்ல நீ
கேள்விகுறியாய்
குனிபவன் நீயல்ல...
ஆச்சரிய குறியாய்
நிமிர்ந்து நிற்பவன் நீ
இருட்டில் வாங்கினோம்
இன்னும் விடியவில்லை என
சொல்லும் வீணன் அல்ல நீ
நாட்டை காட்டி
கொடுக்கும் கயவனுக்கு
பதவியும் பாதுகாப்பும்
கொடுக்கும் அவலம்
நம் நாட்டில்
மட்டுமே நடந்தேறும்
பணம் வாங்கி ஓட்டு
போடும் ஊதாரிக்கு
அறிவு சொல்வோம்...
தவறுகள் திருந்தலாம்
தடைகள் ஏதும் இல்லையே
அரசியல் மாற்றங்கள்
அவனியில் சாத்தியமே
உழவுக்கு நிலமில்லை
அரசியலில் புனிதமில்லை
நீதியில் புனிதமில்லை
செலவுக்கு பணமில்லை
கழனியில் உழவனில்லை
லஞ்சமில்லா அலுவலகமில்லை
என்றெல்லாம் வீண்
கதை பேசி வீணடித்த
காலமெல்லாம் போகட்டும்
மாற்றங்கள் சாத்தியமா ?
என கேட்காமல்
வாருங்கள் மாற்றலாம் ....
ஆடி பட்டம் தேடி
விதைப்பவன்
அறுவடைக்கு
தயாரவது அகிலத்தில்
சாத்தியமே....
லஞ்சத்தின் களை
அழிக்க விதையூன்றி
(களைகொல்லி)
போவோமே.....
பின் வருபவன்
பயன் பெறட்டுமே.....இன்பொ.அம்பிகா