அன்பே நீ வந்தபோது
அன்பே ,
உன்னைப்போல்
தேவதைகள்
ஒருநாளும
பூமிக்கு
வந்ததில்லை!
எதிரியின்
இருகுழல் துப்பாக்கிபோல்
நீ என்னைப் பார்த்தாலும்
உன் ஒருகண்
என்னத் தாக்கும்
உன் மறுகண்
என்னைத் தூக்கும்!.
இனியவளே,
உன் இமையில் வண்டு
எப்போதும் துடிப்பதால்
உன்னை வாடாமலரென்றே
வரணிககப்போகிறேன்!
உன் மைவிழி என்ன
மாதவி வீட்டு ஜன்னலா!
இல்லை
மன்மத நாட்டு மின்னலா!
அழகுசிலையே,
உன்னை ஆக்கிய சிற்பி
ஒன்றை விட்டுவிட்டான்!
உளியை
உன் விழியிலேயே
விட்டுவிட்டான்!
இரண்டு இமைவண்டுகளுக்கு
இசையை கற்றுகொடுக்கும்
குயில் கூட்டமென்றே
உன் கூந்தலை நினைக்கிறேன்!
ஒரு ஒற்றை ரோஜாவை
யார் சொர்கத்திற்கு
அழைத்துசசெல்ல முடியும்
உன் கூந்தலைத் தவிர!
என்னைப்போல் கவி எழுத
எந்தக் கவிங்கனாலும் முடியாது
காரணம்
அது காதலனுக்கு வருவதுபோல்
க்விங்கனுக்கு வராது!
ஆருயிரே,
ஒரேஒரு சொல்லைக் கொண்டு
ஒருகோடி கவி எழுத முடியுமா!
ஏன்
முடியாது
அது உன் பெயராக இருந்தால்!
அன்பே,
நீதான் என் கலைத் தாய்!
ஆனால்...
நீ தானே
என்னைக் கலைத்தாய்!
,