கடவுளுக்கு - இதய அஞ்சலி

மனிதனே நீ
மண் கவ்வ வைத்தாயோ இறைவனையும் ?

காவிரி நீர் பெருக்கெடுக்க
கணபதி காக உரு எடுத்தார்
கடுந்தவமுனி கமண்டலத்தை
கணிவுடனே தட்டி விட்டார்

நீயோ
காவிரியை கைது செய்து - அவருக்கு
கருமாதி செய்து விட்டாய்....

கை காலை உடைத்து விட்டாய் - சாம்பல்
கரைப்பதற்கு நீர் தொலைத்தாய்......

கண்ணீர் வழியுதடா மனிதா - உன்
கருணை செத்த மனத்தைக் கண்டு......

தண்ணி போட்டு ஆடுகிறாய்
சாமி கோசம் போடுகிறாய்.....

பக்தி கோசம் அது அல்ல
ஒப்பாரிப் பாடலடா.......!

பதில் சொல்லடா பைத்தியக் காரா
விநாயகர்
பாதி பாதியாய் கிடக்கிறாரடா........!

கழுகும் அவரை இனி கொத்தாது
களி மண்ணாய் போய் விட்டார்

நீ கருணை தொலைத்ததால்
கடலும் உள் வாங்கி விட்டது.....

காவிரி நீரை அவன் திறக்க மறுப்பான்.....
கருமம் பிடித்த அரசியல் ஆதாயத்துக்காக நீ
கடவுளை இப்படிக் கொன்று கொண்டிரு.......

கடவுளாவது இனி பிழைத்துக் கொள்ளட்டும்
கல்லறைக்குள் நாம் எல்லோரும் செல்வோம்

ஆனை முகத்தோனே - உனக்கு
ஆறுதல் சொல்ல வழி தெரியவில்லை - பலி
ஆடு முகமாக உன்னை பார்க்கின்றனர் - மனிதர்
ஆனந்தமாய் உன் சாவில் மகிழ்கின்றனர்....!

ஐயஹோ என்ன கொடுமை இது ?

எழுதியவர் : (14-Oct-12, 12:51 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 129

மேலே