என் பெண்ணிலவுக்கு ......

மின்சாரக்கனவு - வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் என் வரிமாற்றம் .

பெண்ணிலவே பெண்ணிலவே
உன் எல்லைத்தாண்டி வருவாயா?
இடமாற்ற இதயம் தேவை ...

பெண்ணிலவே பெண்ணிலவே
உன் எல்லைத்தாண்டி வருவாயா?
இடமாற்ற இதயம் தேவை ...

இந்த பிரபஞ்சத்திலே
நானும் பார்த்ததிலே
அடி நீதான் என் இதயத்தின் இணை

(பெண்ணிலவே பெண்ணிலவே )

என் உடல்நீயே என் உயிர் நீயே
நீ என்னைத்தான் சேராத பெண் பாவை
.
என் உடல்நீயே என் உயிர் நீயே
நீ என்னைத்தான் சேராத பெண் பாவை

மடிசாயாமல் உயிர்போகாதே
அடி போனாலும் என் கட்டை வேகாதே

பனியே ! மணியே !

இவ்வுலகெல்லாம் காதலை உதறிப்போன பின்னும்
எனக்கான காதல் உன் மனதில் இருக்கும் இன்னும்

உன் மடியினில் உறங்கும் பிள்ளையாய் நானும்
மாறிடும் வரம் வேண்டும் ..

பெண்ணிலவே பெண்ணிலவே
உன் எல்லைத்தாண்டி வருவாயா?
இடமாற்ற இதயம் தேவை ...

மொட்டாக நீ உந்தன் மனதை வைத்தாய் பொத்தி
காற்றாக உன் மெய்தீண்டி மனதை திறந்தேன் ஒத்தி (ஒற்றி )

உனை எண்ணி எண்ணி செயற்கையை, வெறுக்கிறேன்

மொட்டாக நீ உந்தன் மனதை வைத்தாய் பொத்தி....

பனியே ! மணியே !

உன் மடி மீது தலைசாய்த்து உலகம் துறக்க வேண்டும்
உன் மடி மீதான மயக்கத்திலேயே மரணம் பிறக்க வேண்டும்

என் முகத்தை புதைக்க வேண்டும் நான் ,
பெண்ணே உன் மார்புக்குள் ....

பெண்ணிலவே பெண்ணிலவே
உன் எல்லைத்தாண்டி வருவாயா?
இடமாற்ற இதயம் தேவை ..

இந்த பிரபஞ்சத்திலே
நானும் பார்த்ததிலே
அடி நீதான் என் இதயத்தின் இணை .

எழுதியவர் : (16-Oct-12, 3:41 pm)
பார்வை : 129

மேலே