இரண்டாம் காதல்

(முதல் காதல் தந்த தோல்வியால் துவண்டுபோன இதயத்தின் விரக்தியால் ஏங்கிபோன இதயத்திற்கு மருந்தாகுமே இரண்டாம் காதல்.....ஆனால் காயம் மறைவதில்லை)

உன்னிடம் செய்த தவறுகளை இவளிடம் திருத்திகொண்டேனடி..
ஆனால் அந்த அன்பு இவளிடம் ஒட்டவில்லையடி..!

வலி தந்தவள் நீயே சென்ற பின்பும்
நீ தந்த வலி மட்டும் நெஞ்சில் இன்னும் ஒட்டுதடி...!

உனக்கும் எனக்கு வேற்றுமைகள் பல
இவளிடம் ஒற்றுமைகள் பல இருந்தும்
உன் நினைவுடனே என் வாழ்வு சுமையானதடி...!

இவளுடம் வாழ்வது இனிமை என்றாலும்
உன்னுடன் ஒப்புஇட்டே வாழ்வு கழியுதடி....!

உன்னை தொடாமலே இனிமையை உணர்ந்தேனடி
இவளை தொட்டும் வெறுமையை உணர்கிறேனடி

உன்னிடம் நடுங்கிய குரல்வளையும்
இவளிடம் நடுக்கமின்றி பேசுதடி ஆனாலும்
ஏதோ ஒன்று மட்டும் குறையுதடி......!

வாழ்ந்த நினைவுகள் என்றும் மறக்கபடுவதில்லை
எல்லாம் மறைக்கப்படுகின்றன புதிய வரவால்........!

எழுதியவர் : பூபதி கண்ணதாசன் (16-Oct-12, 7:49 pm)
Tanglish : irandaam kaadhal
பார்வை : 278

மேலே