நிதர்சன உண்மை !
ஒருபிடி சோற்றில் ஏமாந்து
அன்று
காவல் காத்த அந்நாயை
கொண்டாடினார்கள் அனைவரும் !
என்று எதிர்பாராமல்,
விபத்தில் பலியான
அந்த நாயை கண்ட
என் இனத்தவர்கள்
ச்சி-ச்சி அசிங்கம்
வாரி போடுங்கள்
அதை குப்பைதொட்டியில்
என்றார்களே பார்க்கலாம் !
என் கண்ணீர்த்துளிகளும்
உறைந்துவிட்டன !
இவர்களின் செய்கயைகண்டு !
எம்மனிதர்களை கண்டு
எம் மனதை கல்லாக்கி
செதுக்கினேன் -
இம்மனிதர்கள் - ஒருவனை
அவன் மடியும் வரைஅல்ல
அவனிடமிருந்து பயன்
பெறும் வரை மட்டுமே
நினைவில் கொள்கின்றனர் .
அவனிடமிருந்து
பயன்கள் முடிந்தால் மட்டுமல்ல
அவனே மடிந்தாலும் இவர்கள்..
அவனை நினைத்து மட்டுமல்ல..
அவனின் சடலம் உறங்கும்
திசையையும் நோக்குவதில்லை ..
எந்த மானிடபதர்களின்
நடுவில் நான்மட்டுமா சிக்கியுள்ளேன் ..?
இல்லை....இல்லை..
பல பாவப்பட்ட மனிதர்களும்முண்டு
நான் அறிந்த இவ்வுண்மையை
என் மனதில் மட்டும்
செதுகினால் போதுமா ?
என் போன்றவர்கள் அறிந்தாலன்றோ
பிழைகமுடியும்!
எனவேதான்
நான் செதுக்கிய உண்மையை
உங்களிடம் பொழிகிறேன்
கவிதை மழையாய்....!